நடிகர் மனோ கார் விபத்தில் மரணம்…!

சன் டிவியில் தொகுப்பாளராகவும், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியின் நடனக் கலைஞராகவும் பிரபலமானவர் மனோ.

நேற்று அக்டோபர் 28 மனைவி லிவியாவுடன் அம்பத்தூர் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே மனோ மரணமடைந்தார். உயிருக்குப் போராடிய அவரது மனைவி லிவியாவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கார்ட்டூன் கேலரி