பக்தையை அடைத்து வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை ;தலைமைக் குருக்கள் கைது:

அயோத்தியா:

பக்தையை அடைத்து வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக, கோயிலின் தலைமைக் குருக்கள் கைது செய்யப்பட்டார்.

பாலியல் வன்கொடுமை நடந்த கோயில்.

உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியா கோயில் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஒரு கோயிலில் நிகழ்ந்த இந்த கொடுரச் செயல் பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அயோத்தியா போலீஸார் வெளியிட்ட செய்திக் குறிப்பின் விவரம்:

தலைமை குருக்களிடம் ஆன்மீகப் பாடம் படிக்க வாரணாசியிலிருந்து 30 வயது மதிக்கத்தக்க  பக்தை ஒருவர் கடந்த டிசம்பர் 24-ம் தேதி அயோத்திக்கு வந்தார். அவர் கோயிலுக்குள்ளேயே தங்க, தலைமை குருக்கள் ஏற்பாடு செய்தார். இதனையடுத்து, அந்த பக்தையை வெளியே விடாமல் அடைத்து வைத்த தலைமை குருக்கள், பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்..
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அங்கிருந்து தப்பிய அந்த பக்தை, போலீஸாரிடம் சென்று, கண்ணீர் விட்டபடியே நடந்ததைச் சொன்னார். இதையடுத்து, அவருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது். மருத்துவ அறிக்கை மற்றும் வாக்குமுலத்தின் அடிப்படையில் தலைமை குருக்களை போலீஸார் கைது செய்தனர்.
இதே போன்று மேற்கு வங்க தலைநகரம் கொல்கத்தாவிலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்துள்ளது. மன வளர்ச்சி குன்றிய 28 வயது பெண்ணை, குருக்கள் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.