பசுவைக் கொல்வோருக்கு மரண தண்டனை : இந்து அமைப்புகள் அரசுக்கு வேண்டுகோள்

டுப்பி

ந்து அமைப்பினர் கூட்டத்தில் பசுவைக் கொல்வோருக்கு மரண தண்டனை விதிக்க அரசை வற்புறுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

கோயில் நகரம் என அழைக்கப்படும் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் தர்ம சன்சத் என்னும் இந்து மத அமைப்பினர் கலந்துக் கொண்ட பிரம்மாண்டமான கூட்டம் ஒன்று நடந்தது.   அதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.   இதில் பல இந்துத் தலைவர்கள், சன்யாசிகள், மடாதிபதிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இதில் இயற்றப் பட்ட தீர்மானங்களில் பசுவைக் கொல்வதை தடை செய்யும் சட்டமும் ஒன்றாகும்.  அந்த தீர்மானத்தில், “பசுவைக் காக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. இதை முழுமையாக தடை செய்ய மத்திய அரசு உத்தரவிடவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். பிரதமர் மோடி ஒரே இரவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்ததைப் போல் இது குறித்தும் அறிவிக்க வேண்டும்.” என தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

மேலும் சில மடாதிபதிகள் பேசுகையில், “பசு இந்த உலகத்துக்கு ஒரு தாய் போன்றது.  ஆனால் அந்தப் பசு இங்கு வெட்டப்படுவது மிகவும் கொடுமையான ஒன்று.  பசுவை வெட்டுவதற்காக விற்பவர்கள் கொடுமைக்காரர்கள். பசுப் பாதுகாவலர்கள் பசுவைக் காக்க எதையும் செய்ய முடிவெடுத்துள்ளார்கள்.  ஆனால் அவர்கள் ரவுடிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள்.  பசுப் பாதுகாவலர்கள் தான் உண்மையில் பாதுகாப்பில்லாமல் இருக்கிறார்கள்.  அவர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர்.