பச்சிளம் குழந்தைகளைக் கொன்ற சாதீ!

 

எரிக்கப்பட்ட குழந்தைகள்
எரிக்கப்பட்ட குழந்தைகள்

 

சண்டிகர்:

ரியானா மாநிலத்தில் தலித் குடும்பம் வசித்த குடிசைக்கு உயர் சாதியினர் தீ வைத்ததில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டார்கள்.

ஹரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டம் சன்பெத் கிராமத்தில் கடந்த மாதம் உயர்சாதியினரான ராஜ்புட் இனத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தலித் இனத்தைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் வீடு மீது நேற்று இரவு ராஜ்புட் சாதியினர் தாக்குதல் நடத்தினர். பிறகு குடிசைக்குத் தீ வைத்தனர். இதில், வீட்டில் இருந்த தம்பதி படுகாயம் அடைந்தனர்.

அவர்களின் இரண்டரை வயது மகள் திவ்யா மற்றும் ஒன்பது மாத ஆண் குழந்தை வைபாப் ஆகியோர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பலியானார்கள்.

பழிக்குப் பழியாக நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.