Random image

பஞ்சாப் பல்கலை மாணவர் தேர்தல் : முதல் பெண் தலைவராக கனுப்ரியா தேர்வு

ண்டிகர்

ஞ்சாப் பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் இடது சாரி ஆதரரவாளரான கனுப்ரியா முதல் பெண் மாணவர் தலைவராக தேர்வாகி உள்ளார்.

சண்டிகரில் அமைந்துள்ள பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்துக்கான தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர், இணை செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.   கடந்த 2016 ஆம் வருடம் முதல் இந்த் மாணவர் தேர்தலில் நோட்டாவும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.   இந்த தேர்தலில் மொத்தம் 21 பேர் போட்டியிட்டனர்.

இதில் இடது சாரி இயக்கமான மாணவர் சமூகம் மற்றும் பாஜக வின் மாணவர் அணியான ஏபிவிபி ஆகிய அணிகளுக்கிடையே கடும் போட்டி இருந்தது.  இது தவிர மேலும் சில மாணவர் இயக்கங்களும் போட்டி இட்டன.   தேர்தலுக்கு வாக்களிக்க இருந்த 43000 மாணவர்களில் பலர் வாக்களிக்க வரவில்லை.

இந்த தேர்தலில் தலைவராக இடது சாரி இயக்கமான மாணவர் சமூகத்தை சேர்ந்த 22 வயதான கனுப்ரியா வெற்றி பெற்றுள்ளார்.    கனுப்ரியா இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் ஆவார்.   இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஏபிவிபி உள்ளிட்ட அனைத்து ஆண் வேட்பாளர்களையும் தோற்கடித்துள்ளார்.

பொதுச் செயலாளர் மற்றும் இணைச் செயலாளர்களுக்கான தேர்தலில் பெரும்பாலானவர்கள் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.   செயலாளர் தேர்தலில் 990 வாக்குகளும் (10.51%) மற்றும் இணை செயலாளர் தேர்தலில் 870 வாக்குகளும் (9.39%) நோட்டாவுக்கு கிடைத்துள்ளன.