படிப்படியாக பூரண மதுவிலக்கு :ஜெயலலிதா அளித்த உறுதி

 

chennai admk

சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் ஜெயலலிதா தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அதனை தொடர்ந்து சென்னையில் உள்ள 21 தொகுதிகளின் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைத்தார்.

இப்பிரச்சாரத்தில் பேசிய அவர், ‘’மதுவை அறிமுகப்படுத்தியது திமுக தான். மதுவிலக்கு பற்றி பேசி வாக்குகள் பெற முயல்கிறார் கருணாநிதி. பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்பது தான் எனது நோக்கம். ஒரு அறிவிப்பை வெளியிட்டால் அதை செயல்படுத்தியே தீருவது என்னுடைய வழக்கம் ஆகும். மதுக்கடைகள் படிப்படியாக தமிழகத்தில் குறைக்கப்படும். முதல்கட்டமாக மது விற்பனையின் நேரம் குறைக்கப்படும். மதுவால் பாதிக்கப்பட்டோர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.மதுக்கடைகள் குறைக்கப்பட்டு பூரண மதுவிலக்கு அமல்படுத்தபடும்’’ என்று உறுதியளித்தார்.