பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் உயிர்த்தியாகம் செய்த சூப்பர் ஹீரோ!

b

 

பிரான்ஸில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கில் சூட்டில் காவல் துறையினரின் மோப்பநாய் ‘சூப்பர் ஹீரோ’  டீசல் உயிர் தியாகம் செய்தது.

129 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட பாரீஸ் தாக்குதலுக்கு மூளையாக இருந்து தாக்குதலை செயல்படுத்திய அப்துல் ஹமீது அபாவுத் உள்ளிட்ட தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை  காவல் துறையினர் முற்றுகையிட்டனர்.

பாரீஸ் நகரின் புறநகரான செயின்ட் டெனிஸ் என்ற இடத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில்தான் இந்த பயங்கரவாதிகள் பதுங்கியிருந்தார்கள்.

தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து  பல லாரிகளில் ஆயுதம் தாங்கிய காவலர்கள் அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.  அப்போது பாதுகாப்பு படைக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பலமணி நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இந்த துப்பாக்கி சண்டையில் ஒருபெண் உள்பட இருவர் பலியானார்கள், ஏழு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டார்கள்.

இந்த சண்டையின்போது, பாதுகாப்பு படையினருக்கு பக்கத்துணையாக செயல்பட்டது டீசல் என்கிற நாய்.  இதை சூப்பர் ஹீரோ என்றே பாதுகாப்பு படையினர் அழைப்பார்கள். அந்த அளவுக்கு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளில் சாகசங்களை செய்திருக்கிறது.

 

a

இந்த நாயை குறிவைத்து தீவிரவாதிகள் சுட்டனர். இந்த சமயத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த மூன்றாவது தளத்தில் இருந்த பெண் பயங்கரவாதி, தற்கொலை வெடிகுண்டை வெடிக்கசெய்ய…  அந்த, குடியிருப்பின் மூன்றாவது கட்டிடம் சிதைந்தது.

இதனால் சூப்பர்  ஹீரோ’  டீசலும் உடல்சிதறி பலியானது.   தற்போது டீசலுக்கு பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வீட்டில் நாய்களை வளர்ப்பவர்கள், தங்களது நாய்களின் கழுத்தில் டீசலுக்கு அஞ்சலி தெரிவிக்கும் விதமான வாசகங்கள் எழுதிய அவற்றின் கழுத்தில் தொங்கவிட்டு உள்ளனர்.

பிரான்ஸ் தீவிரவாதப்படையில் சிறப்பாக பணியாற்றி பல்வேறு பதக்கங்களை தனதாக்கிய டீசலுக்கு வயது ஏழு.

“எங்களில் ஒரு வீரரை இழந்தது போன்று உணர்கிறோம்,” என்று பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பயனாளர்களும் தங்களது டீசலுக்கு  அஞ்சலி தெரிவிக்கும் விதமாக தகவல்களை பகிர்ந்து வருகின்றார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published.