பயனுள்ள பிட்ஸ்: வெள்ளிக் கொலுசை பாதுகாக்க..

newnw

@ எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கி போய்விடும். ஆகவே வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து  வந்தால் எப்போதும் மின்னனும்.

@ எறும்புத் தொல்லையிலிருந்து விடுபட எளிதான வழி.  ஒரு குவளைர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் டேபிள் உப்பு கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிடுங்கள். எறும்புகள் அண்டாது!

@ கொலுசு வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம்

@ துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால்  சாதாரணமாக போகாது.  துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவுங்கள்..கறை காணாமல் போய்விடும்.

@ பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படியச் செய்யுங்கள்.  ஓட்டை அடைபடும்.

@ எப்பொழுதாவது உபயோகிக்கும் “ஷூ”க்களில் ரசகற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு “ஷூ”விலும் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

@ ஷாம்புவை பயன்படுத்திய பிறகு அப்படியே தூக்கி எறியாமல், அந்த கவர்களை  துவைக்கும் துணிகளுடன்  ஊறவையுங்கள்.  துணி வாசனையாக் இருக்கும்.

@ அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில் சிறிதளவு புளியைத் தடவிப் பிறகு வழக்கம் போல் கிளீனிங் பவுடர் போட்டுத் தேய்த்தால், துர்நாற்றம் இருக்காது.

@ பொருட்களை கறையான் அரிக்காமல் இருக்க கற்பூரத்தைப் பொடி செய்து தூவி வையுங்கள்.

 

தோழிகளே.. நீங்களும் வீட்டுக்குறிப்புகளை ungalpathrikai.com  இதழுக்கு அனுப்புங்கள்.

மெயில்:  pathrikaidotcom@gmail.com

1 thought on “பயனுள்ள பிட்ஸ்: வெள்ளிக் கொலுசை பாதுகாக்க..

  1. I am only writing to make you understand what a terrific experience our princess undergone viewing yuor web blog. She picked up such a lot of things, with the inclusion of what it is like to possess an ideal teaching style to make the others without hassle thoroughly grasp specified tricky topics. You undoubtedly surpassed visitors’ expected results. Thanks for showing those valuable, trustworthy, revealing not to mention unique tips on your topic to Sandra.

Leave a Reply

Your email address will not be published.