பரபரப்பான அரசியல் சூழலில் கருணாநிதி-மு.க.அழகிரி சந்திப்பு

mugaalakiri1

பரபரப்பான அரசியல் சூழலில் திமுக தலைவர் கருணாநிதியை மு.க.அழகிரி இன்று சந்தித்து பேசினார். கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார் 20 நிமிடம் இருவரும் சந்தித்துப்பேசினர். பின்னர் அரசியல் நிலைப்பாடு குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்து மு.க. அழகிரி சென்றுவிட்டார். திமுகவில் அழகிரி மீண்டும் சேர்க்கப்படுவாரா என வியூகங்கள் எழுந்து வரும் நிலையில், இந்த சந்திப்பு அரசியல் முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆனால், கருணாநிதியுடனான மு.க.அழகிரி சந்திப்பு குறித்த கேள்விக்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் பதில் அளிக்க மறத்து விட்டார்.