பலாத்காரம்! சவுதி இளவரசர் கைது!

ila

வாஷிங்டன்:

ணிப்பெண்ணை பலாத்காரம் செய்ததாகவும் இயற்கைக்கு மாறான முறையில் உறவுக்கு வற்புறுத்தியதாகவும் சவுதி அரேபிய இளவரசரை அமெரிக்க போலீசார் கைது செய்து உள்ளனர்.

சவுதி இளவரசர்களில் ஒருவரான மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத் (28) என்பவருக்கு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், பிரமாண்டமான மாளிகை உள்ளது. இந்த மாளிகையின் 8 அடி உயர மதில் சுவரை தாண்டி குதித்து ரத்தக் காயங்களுடன் தப்பிவந்த ஒரு இளம்பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார்.

தான் இளவரசர் வீட்டில் வேலை பார்த்து வந்ததாகவும், .உறவுக்கு உடன்பட வேண்டும் என்று இளவரசர் மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத் தன்னை வற்புறுத்தியதாகவும், இயற்கைக்கு முரணான வகையில் உறவு கொண்டதாகவும் புகாரில் தெரிவித்தார்.

இதையடுத்து சவுதி இளவரசரின் மாளிகையை போலீசார் முற்றுகை இட்டனர். அங்கு விருந்து கேளிக்கையில் ஈடுபட்டிருந்த சுமார் 20 பேரை வெளியேற்றினர். பிறகு இளவரசர் மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத்தை கைது செய்தனர்

இது குறித்து ஊடகங்களுக்கு தகவல் அளித்த காவல்துறையினர், கைது செய்யப்பட்ட இளவரசர் மீது, மேலும் நான்கு பெண்கள் இதே குற்றச்சாட்டை கூறியுள்ளனர் என்று தெரிவித்தார்கள்.

இளவரசர் மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத் மீது இயற்கை நியதிக்கு மாறான வகையில் பெண்ணை உறவுக்கு வற்புறுத்திய குற்றப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பிறகு . 3 லட்சம் அமெரிக்க டாலருக்கு ஜாமினில் விடுவிக்கபட்டார்.

இளவரசர் மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத் அக்டோபர் 19ம் தேதி விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம், இந்திய தலைநகர் டில்லியில் தனது வீட்டில் பணி புரிந்த இரு பெண்களை, சவுதி தூதுவர் தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்ததும், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படாமல், சவுதிக்குத் திரும்ப வாய்ப்பளித்ததும் குறிப்பிடத்தக்கது.

(படம்: இளவரசர் மஜித் அப்துல் அஜிஸும் அவர் வாழும் மாளிகையும்)

 

Leave a Reply

Your email address will not be published.