பலாத்கார சாமியாரிடம் அபராதம் செலுத்த பணமில்லையாம்…

ண்டிகர்

லாத்கார சாமியார் ராம் ரஹீமிடம் அபராதம் செலுத்த பணம் இல்லை என அவர் வழக்கறிஞர் பஞ்சாப் – அரியானா உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் ராம் ரஹிம் அவருடைய சிஷ்யைகளை பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.   அந்த அபராத தொகை பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களுக்கு இழப்பீடாக தர வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ராம் ரஹீம் பஞ்சகுலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   அவருக்கு அப்பீல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   அதைத் தொடர்ந்து அவருடைய வழக்கறிஞர் நேற்று அவருக்கான அப்பீல் மனுவை பஞ்சாப் – அரியான உயர்நீதிமன்றத்தில் அளித்தார்.

அந்த மனுவில், சாமியாரிடம் தற்போது அபராதத் தொகையான ரூ. 30 லட்சம் இல்லை எனவும்,  அந்த அபராதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.   மேலும்  சாமியார் தன்னிடம் உள்ள அனைத்து பணைத்தையும் உலகத்தை புணரமைக்க செலவிட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சுர்யகாந்த் மற்றும் சுதீர் மிட்டல் ஆகியோரின் அமர்வில் விசாரணைக்கு வந்தது.    இந்த மனுவை விசாரைத்த நீதிபதிகள் அப்பீலை ஏற்றுக் கொண்டு சி பி ஐ க்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளனர்.    அதே நேரத்தில் சாமியாருக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறைவு என பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் அளித்த அப்பீல் மனுவும் உயர்நீதி மன்றம் ஏற்றுக் கொண்டது.

அத்துடன் அபராதம் பற்றி ராம் ரஹீமின் வழக்கறிஞர் எஸ் கே கர்க்  கூறியவைகளை நீதிமன்றம் ஏற்கவில்லை.   அதை தொடர்ந்து வழக்கறிஞர் தேரா சச்சாவின் அனைத்து சொத்துக்களும் முடக்கப்பட்டதாலும்,  கையிருப்புத் தொகையை சாமியார் உலக மேம்பாட்டுக்காக செலவழித்ததாலும் அபராதம் செலுத்த பணம் இல்லை என தெரிவித்தார்.   ஆனால் நீதிபதிகள் அதை ஒப்புக் கொள்ளவில்லை.   இன்னும் இரண்டு மாதங்களுக்குள் நீதிமன்றத்தில் அபராதத் தொகையை செலுத்த வேண்டும் எனவும்,  அப்பீல் முடிந்தபின் சாமியாருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் தொகை திரும்ப அளிக்கப்படும் எனவும் அப்படி இல்லை எனில் அந்தத் தொகை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவ்த்துள்ளது.