microsoft
மைக்ரோசாஃப்ட்

 

வாஷிங்டன்:
இன்டர்நெட் எக்ஸ்ப்லோரர் 8, 9, 10 பதிப்புகளை முடக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு பதிலாக 11வது பதிப்பை வரும் 12ம் தேதி அந்நிறுவனம் வெளியிடுகிறது. முந்தை பதிப்புகளுக்கான பாதுகாப்பு, தொழில்நுட்ப உதவி மற்றும் அப்டேட்களை புதுப்பிக்கும் பணியை கைவிடுவதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. வைரஸ் தாக்குதலில் இருந்து கம்ப்யூட்டர்களை பாதுகாப்பதற்கு இந்நிறுவனத்தின் அப்டேட்ஸ் அவசியமாகும்.
அதனால் பழைய பதிப்புகளை கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் அனைவரும் 11வது பதிப்புக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 11வது பதிப்புக்கு மட்டுமே அப்டேட் உள்ளிட்ட இதர உதவிகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனிவும் 9வது பதிப்பின் தொழில்நுட்பம் 11வது பதிப்புடன் ஒத்துபோவதால் இதற்கு மட்டும் விதிவிலக்காக அனைத்து உதவிகளும் தொடரும் எனவும் அறிவித்துள்ளது.
இந்த மாற்றத்தினால் 340 மில்லியன் பேர் பாதிப்புக்கு உள்ளாவார்கள். இவர்களை அனைவரும் பழைய பதிப்புகளை பயன்படுத்துவதாக ஒரு இணையதளம் தெரிவித்துள்ளது. அதாவது 42.5 சதவீதம் பேர் பழைய பதிப்புகளில் இன்டர்நெட்டை பிரவுசிங் செய்கின்றனர். 500 பேர் பணிபுரியும் நிறுவனங்களுக்கு இந்த புதிய பதிப்புக்கு மாறும் பணியை செய்து தர தயாராக இருப்பதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.