பாகிஸ்தானுக்கு அளித்து வந்த நிதியுதவி நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்:

பாகிஸ்தானுக்கு அளித்து வந்த நிதியுதவியை நிறுத்துவதாக  அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் போன்றவர்களுக்கு அடைக்கலம் அளித்ததை தவிர பாகிஸ்தான் ஒன்றும் செய்யவில்லை, என ஆவேசமாக கூறினார்.

தீவிரவாத தாக்குதலில் இருந்து காத்துக்கொள்ள ஆசிய நாடுகளுக்கு அமெரிக்கா நிதியுதவி செய்து வருகிறது. ஆனால், பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஒசாமா பின் லேடன் போன்ற தேடப்படும் குற்றவாளிகளை மறைத்து வைக்க அதைப் பயன்படுத்தியது.

பாகிஸ்தானின் ராணுவ தலைமையகத்தின் அருகே அபோட்டாபாத் பகுதியில் ஒசாமா பின்லேடன் பாதுகாப்பாக வாழ்ந்தது அந்நாட்டில் உள்ள அனைவருக்குமே தெரிந்திருந்தது.

இருப்பினும், அமெரிக்கா ஆண்டுதோறும் பாகிஸ்தானுக்கு அளித்துவந்த 130 கோடி டாலர்களை பெற்றுக்கொண்டு தீவிரவாதிகளை ஒழிக்க நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பதால் அவர்களுக்கு நிதி உதவியை அமெரிக்க அரசு கொடுக்க மறுத்துள்ளது.

கார்ட்டூன் கேலரி