பாகிஸ்தான் உளவுத்துறை தலைவராக பைஸ் அமீத் நியமனம்

ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ எஸ் தலைவராக லெப்டினெண்ட் ஜெனரல் பைஸ் அமீத் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஐஎஸ் எனப்படும் பாக் உளவுத்துறையின் தலைவரான நவீத் முக்தர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.  அப்போது அவருக்கு பதிலாக ஆசிம் முனிர் நியமிக்கப்பட்டார்.  இந்த பதவிக்காலம் பொதுவாக மூன்று ஆண்டுகள் ஆகும்.

ஆனால் தற்போது முனிம் இந்த பதவியில் இருந்து பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   அவர் குர்ஜன்வாலா படைப் பிரிவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.   அவருக்கு பதிலாக பைஸ் அமீத் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக நேற்று பாக் ராணுவம் அறிவித்தது.

பைஸ் அமீத் ஏற்கனவே ஐஎஸ் உளவுத்துறையின் புலனாய்வுப் பிரிவு தலைவராக பதவி வகித்து வந்தார்.  அவர் ராணுவ தலைமையகத்துக்கு கடந்த  எப்ரல் மாதம் 12 அன்று இடமாற்றம் செய்யப்பட்டார்.  தற்போது ஐஎஸ் தலைவர்  பதவி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed