பாஜக சார்பில் நாடாளுமன்றத்தில் தேர்தலில் குதிக்கும் மாதுரி தீட்சித்? உ.பி.யில் போட்டி

டில்லி:

பிரபல பாலிவுட் முன்னாள் நடிகையான மாதுரி தீட்சித் பாஜக சார்பாக அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குகிறார். உ.பி. மாநிலத்தின் புனே தொதியில் அவர் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.

1980 மற்றும் 90ம் ஆண்டுகளில் இந்தி பட உலகில் புகழ் பெற்ற நடிகையாக திகழ்ந்தவர் மாதுரி தீட்சித். அவரது நடனத்துக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. 1999ம் ஆண்டு டாக்டர் ஸ்ரீரோம் நேகாவை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனவர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.

அமித்ஷாவுடன் மாதுரி தீட்சித் உடன் அவரது கணவர், மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ்

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை தனது கணவருடன் சந்தித்து பேசிய நிலையில், தற்போது அவர் நாடாளுமன்றத்தேர்தலில்  குதிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் வகையில், பிரபலமானவர்களை களமிறக்க முயற்சி செய்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநிலங்களிலும் பிரபல தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகளை வளைத்து வருகிறது.

ஏற்கனவே பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், மலையாள நடிகர் மோகன்லால், தமிழகத்தில் ரஜினி உள்பட பலரை வசியப்படுத்தி உள்ள நிலையில், தற்போது இந்தி திரையுலகை சேர்ந்தவர்களையும் வலைவீசி பிடித்து வருகிறது.

இதன் முதல்கட்டமாக நடிகை மாதுரி தீட்சித்தை  புனே தொகுதியில் மாதுரி தீட்சித் களமிறக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

பிரபலங்களை தேர்தலின்போது களமிறக்கினால் எளிதாக வெற்றிபெற்று விடலாம் என்று மனப்பால் குடித்து, நடிகர், நடிகைளை களமிறக்க பாரதியஜனதா தலைமை முயற்சி மேற்கொண்டு வருகிறது.

கார்ட்டூன் கேலரி