பாமக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்

Ramadoss pmk

பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களில் 45 பேர் கொண்ட முதல் பட்டியலை பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது. பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களில் 45 பேர் கொண்ட முதல் பட்டியலை பா.ம.க நிறுவனர் ராமதாஸ், பா.ம.க முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மீதமுள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

You may have missed