பாலகுமாரன் கதையில் மன்னராக அஜித்

1 ajith
கடந்த சில மாதங்களாகவே உலவி வந்த தகவல் உறுதியாகி இருக்கிறது.  இயக்குநர் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில், எழுத்தாளர் பாலகுமாரனின் மன்னர் காலத்து கதையில் நடிக்கிறார் அஜீத்.

ஆனால் ஏற்கெனவெ வந்தது போல, ராஜராஜ சோழன் வேடம் அல்லவாம்.

இது குறித்து பாலகுமாரன்,  “அஜித்குமாருக்காக கதை எழுதுவது உண்மைதான். ஆனால் தஞ்சை பெரியகோயில் பற்றிய கதையோ, ராஜராஜ சோழனைப் பற்றிய கதையோ கிடையாது.

ஆனால் ஒரு சோழ மன்னரைப் பற்றிய கதை என்பதை மட்டும் இப்போதைக்கு உறுதியாகச் சொல்ல முடியும்” என்று கூறுகிறார் எழுத்தாளர் பாலகுமாரன்.