பிஃபா உலக கோப்பை: தமிழ்நாட்டை சேர்ந்த மாணவி பங்கேற்பு

ஜூன்13ம் தேதி ரஷ்யாவில் நடைபெறும் உலக கோப்பை போட்டிக்காக ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களுடன் இந்திய சார்பில் இரண்டு மாணவர்கள் பிரநிதித்துவம் படுத்தும் விதமாக பங்கேற்கிறார்கள். அவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவி போட்டி தொடங்கும் முன் வீரர்களுக்கு கால்பந்தை வீச உள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த நதானியா ஜான் என்ற மாணவி கர்நாடகாவை சேர்ந்த ரிஷி தேஜ் என்ற மாணவருடன் இணைந்து போட்டியின் போது மைதானத்திற்கு வர உள்ளார்.

fifa world cup - tn girl representing
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இரண்டு மாணவர்களின் பெயர்கள் இடம்பெற்றன. பிரேசில் எதிர் அணியான கோஸ்டாவை எதிர்கொள்ளும் போட்டியில் 11வயதான நதானியா பந்தை வீச உள்ளார். இதே போல், 10வயதான ரிஷி பெலிஜியம் எதிரணியான பனாமா நாட்டுடன் மோதும் போட்டியின் பந்தை வீச உள்ளார். உலக கோப்பை கால்பந்து போட்டியில் வீரர்களுக்கு பந்துக்களை வீச முதல் முறையாக இந்தியாவில் இருந்து ரிஷியும், நதானாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 10-14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போட்டியில் 1600 பேர் பங்கேற்றனர். அதில் வெற்றிப்பெற்ற நதானியா மற்றும் ரிஷி உலக கோப்பை போட்டியில் பந்துக்களை வீச தேர்வு செய்யப்பட்டனர்.

பிஃபா உலக கோப்பை போட்டியில் பந்துக்களை கொண்டுவரும் நிகழ்ச்சிக்காக உலகம் முழுவதிலும் இருந்து 64 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இது அவர்களின் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கிடைக்க கூடிய வாய்ப்பு ஆகும். இந்த அரிய வாய்ப்பை ரிஷியும், நதானியாவும் தக்கவைத்து கொண்டனர்.

மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கார்ட்டூன் கேலரி