kovan011_2604241f

 

க்கள் கலை இலக்கிய பிரச்சார பாடகர் கோவன், “மூடு டாஸ்மாக்கை மூடு, நீ ஓட்டு போட்டவன் மூடுவான்னு காத்திருப்பது கேடு’ என்ற பாடலை பாடியதற்காக கடந்த அக்டோபர் 30-ம் தேதி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து அந்த பாடல் மேலும் பிரபலமானது. இணையத்தில் லட்சக்கணக்கானவர்கள் அந்த பாடலை பரப்பினர்.

இன்னொரு புறம், இந்த கைதுக்கு எதிர்ப்பு அதிகமானது. எதிர்க்கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் இந்த கைதை கண்டித்தனர்.

தொடர்ச்சியான சட்டப் போராட்டத்தின் விளைவாக, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கோவனுக்கு பிணை விடுதலை கிடைத்தது.

தனது கைது குறித்து கோவன் கூறியதாவது:

“என்னுடைய கைதைக் கண்டித்துப் போராட்டம் நடத்திய வழக்கறிஞர், மனித உரிமை ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் நன்றி. இவ்வளவு பெரிய உணர்ச்சிக் கொந்தளிப்பை என்னுடைய கைது ஏற்படுத்தும் என்று நான் நினைத்துகாட பார்க்கவில்லை. தமிழக அரசு என்னதான் அடக்குமுறையை ஏவினாலும் என் பாட்டு நிற்காது. கடைசி டாஸ்மாக் கடையை இழுத்து மூடும் வரை நான் பாடிக் கொண்டேயிருப்பேன்” என்றார்.

மேலும், சிறையில் தான் பாடிய பாட்டையும் பாடிக்காட்டினார். அந்த பாடல்:

 

ஊரெங்கும் மழைவெள்ளம்

தத்தளிக்கிறது தமிழகம்

இது யாரோட குத்தம்னு

கேட்காத சிறைவாசம்!

சாக்கடை ஊட்டுக்குள்ளே

போக்கிடம் ஏதுமில்லே…

பாக்க வந்த அம்மாவோட

காரு கூட நனையவில்லை..

பொங்கித் தின்ன வழியில்லை

பொட்டலம்தான் கதியில்லை

போயஸ் ராணி ஆட்சியில

போட்டோவுக்கு குறைச்சல் இல்ல…

தீபாவளி சரக்கு ஓட்ட திட்டம் 400 கோடி

தியேட்டரை வளைச்சு போட திட்டம் 1000 கோடி

தண்ணியில மிதந்து மிதந்து தமிழகமே டெட்பாடி

தடுக்க என்ன திட்டம்னு கேட்காதே தடியடி”