பிரதமர் தலைமையில் 17ம் தேதி நிதி ஆயோக் கூட்டம்

டில்லி:

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 4வது நிர்வாக குழு கூட்டம் 17ம் தேதி ராஷ்டிரபதி பவனில் நடக்கிறது. இதில் விவசாயிகள் வருமானத்தை இரண்டு மடங்கு உயர்த்துதல், ஆயுஷ்மன் பாரத், தேசிய ஊட்டச்சத்து திட்டம், இந்திராதனுஷ் போன்ற திட்டங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

மேலும், மாவட்டங்களின் மேம்பாடு, மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தின கொண்டாட்டம் போன்றவையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்களும் ஆய்வு செய்யப்படவுள்ளது.

இந்த கூட்டத்தில் முதல்வர்கள்ல மத்திய அமைச்சர்கள், யூனியன் பிரதேச கவர்னர்கள், மத்திய அரசு அதிகாரிகள் இதில் கலந்துகொள்கின்றனர்.