பிரதமர் மோடிக்கு மு க அழகிரி வாழ்த்து

துரை

பாஜகவின் மக்களவை தேர்தல் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு மு க அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தென் மாநிலங்களான தமிழகம் மற்றும் கேரளாவில் கடும் தோல்வி அடைந்தது. ஆயினும் வட மாநிலங்களில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அடுத்து ஆட்சி அமைக்க உள்ள பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திமுகவின் முன்னாள் தலைவர் மறைந்த மு கருணாநிதியின் மகன் மு க அழகிரி கட்சியின் தென் மண்டல பொறுப்புக்களை கவனித்து வந்தார். ஆனால் அவருக்கும் கட்சி தலைமைக்கும் இடையே ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக தீவிர அரசியலில் இருந்து மு க அழகிரி ஒதுங்கி இருக்கிறார். நடந்த மக்களவை தேர்தலிலும் அவர் ஏதும் செய்யவில்லை.

பிரதமர் மோடிக்கு மு க அழகிரி அனுப்பி உள்ள வாழ்த்துக் கடிதத்தில், “தாங்கள் மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதற்கு எனது உளமார்ந்த வழ்த்துக்களை தெரிவிக்கிறேன். நீங்கள் மீண்டும் இந்நாட்டின் பிரதமர் ஆவதில் மகிழ்கிறேன். நாடு உங்கள் தலைமையில் முன்னேற்றம் அடையவும் உங்கள் தனித்திறமைகளை எதிர்கால திட்டங்களில் காட்டி வெற்றி அடைவீர்கள் எனவும் மேலும் வாழ்த்துகிறேன்” என் தேரிவித்துள்ளார்.