பிரியங்காவின் கணவரும் அரசியல் பிரவேசம்.. ‘’வழக்குகளை முடித்து விட்டு வருவேன்’’என அதிரடி..

பிரியங்காவின்
கணவரும் அரசியல்
பிரவேசம்..
‘’வழக்குகளை முடித்து விட்டு
வருவேன்’’என அதிரடி..
* *

இந்திரா காந்தி குடும்பத்தில் ஏற்கனவே நான்கு பேர் தீவிர அரசியலில் உள்ளனர்.சோனியா,ராகுல், மேனகா,வருண் ஆகிய நான்கு காந்திகளும் உ.பி.யில் எம்.பி.க்களாக உள்ளனர்.

சற்று முன்பாக இன்னொரு காந்தியான பிரியங்காவும் நேரடி அரசியலுக்கு வந்து விட்டார்.அவரது கணவர் ராபர்ட் வதேராவும் அரசியலுக்கு வரப்போவதாக தனது முகநூல் பக்கத்தில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

‘’நாடு முழுவதும் நான் பல வருடங்களாக பிரச்சாரம் செய்துள்ளேன்.மக்களுக்கு நான் ஏதாவது செய்ய நினைக்கிறேன்.எனது இத்தனை வருட அனுபவத்தை வீணாக்க விரும்பவில்லை.’’என்று முகநூலில் முன்னுரை எழுதியுள்ள வதேரா ‘’என் மீதான வழக்குகளை முடித்து விட்டு மக்கள் சேவையாற்ற வரப்போகிறேன்’’ என்று அதிரடி கிளப்பி உள்ளார்.

இதனை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.’’வதேரா நிறைய சமூக சேவையாற்றியுள்ளார்.அவர் அரசியலுக்கு வர மோடி அனுமதி தேவை இல்லை’’ என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவான் கேரா கருத்து தெரிவித்துள்ளார்.
’’காங்கிரஸ் கட்சி லோக்சபா தேர்தலுக்கு பிரதமர் வேட்பாளரை வழங்கி உள்ளது’’ என்று வழக்கம் போல் வதேரா வருகையை நக்கல் செய்துள்ளது பா.ஜ.க

–பாப்பாங்குளம் பாரதி

கார்ட்டூன் கேலரி