பீட்டர் உட்பட அதிருப்தி த.மா.காவினர் நாளை மறுநாள் காங்கிரஸில் இணைகிறார்கள்

download

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர், ம.ந.கூட்டணி – தே.மு.தி.கவுடன் கூட்டணி அமைத்ததை அக் கட்சியின் இரண்டாம்கட்ட தலைவர்கள் பலரும் தொண்டர்களும் விரும்பவில்லை. இதையடுத்து  எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், அ.தி.மு.கவின் அழைப்புக்காக காத்திருப்பதாக பேட்டி அளித்தார்.  வாசன் அமைத்த கூட்டணி தவறு என்று பீட்டர் அல்போன்ஸூம் வெளிப்படையாகக் கூறினார்.

இந்தநிலையில் வாசன் முடிவினால் அதிருப்தி அடைந்த த.மா.காவினர் பலர் காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு செய்தனர்.  இதையடுத்து  காங்கிரஸின் டில்லி தலைவர்களை தொடர்புகொண்டனர். தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை அணுகும்படியும்,  தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி  பவனில் இணையலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டனர்.

இதையடுத்து நாளை மறுநாள் பீ்ட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட த.மா.கா. தலைவர்கள் பலர், காங்கிரஸில் முறைப்படி இணைகிறார்கள்.  மேலிடபார்வையாளரான முகுல் வாஸ்னிக் அன்று வருகிறார். அவர் முன்னிலையில் இணைகிறார்கள்.