புதிய தமிழகம் கட்சிக்கு டி.வி. சின்னம்

TVChannel
திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இணைந்துள்ளது. அக்கட்சிக்கு ஒட்டபிடாரம், வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிப்புத்தூர், கிருஷ்ணராயபுரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சிக்கு டி.வி. சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதிக்குள் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.