புதிய தமிழகம் போட்டியிடும் 4 தொகுதிகள் அறிவிப்பு

 

puthiya
திமுக கூட்டணியில் இணைந்துள்ள புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து புதிய தமிழகம் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என திமுக தலைவர் கருணாநிதியை புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் ஒட்டபிடாரம், வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிப்புத்தூர், கிருஷ்ணராயபுரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சி போட்டியிடும் சின்னம் குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்றார்.

You may have missed