பூமியில் இருந்து மார்ஸ் கிரகத்துக்கு 3 நாளில் சென்றுவிடலாம்

செவ்வாயின் படம்

வாஷிங்டன்:

மூன்று நாட்களில் விண்கலத்தை மார்ஸ் கிரகத்துக்கு கொண்டு செல்லும் புதிய லேசர் தொழில்நுட்பத்தை நாசா விஞ்ஞாணிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கலிபோர்னியாவில் உள்ள சாந்த பார்பாரா நகரில் உள்ள கலிபோர்னியா பலகலைக்கழகத்தை சேர்ந்த பிலிப் ல;பின் என்பவர் ‘ஒளியனியல் உந்துதல்’ முறையில் லேசர் ஒளி உதவியுடன் விண்கலத்தை மார்ஸ் கிரகத்துக்கு கொண்டு செல்லும் திட்டத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாது:
தற்போது மின் காந்த சுழற்சி முறையில் ரசாயன பயன்பாட்டுடன் ராக்கெட் போன்ற விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. ரசாயனம் எரிக்கப்படும் போது கிடைக்கும் உந்துதல் சக்தி மூலம் விண்கலம் விண்ணில் முன்நோக்கி செல்லும் தொழில்நுட்பம் தான் தற்போது பயன்படுத்தப்படுகிறது. இதன் செலவும் அதிகம். மேலும், விண்கல பயண நேரத்திற்கு ஏற்ப ரசாயன கொள்ளளவையும் அதிகப்படுத்த வேண்டும்.

இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் ஒளியில் இருந்து கிடைக்கும் ஒளியனியல் மூலம் விண்கலத்தை விண்ணில் உந்தி முன்னோக்கி அழைத்துச் செல்லும். இதற்கு சூரியனில் இருந்து கிடைக்கும் ஒளியனியலுக்கு பதிலாக பூமியில் இருந்து லேசர் ஒளியை செலுத்தி விண்கலம் உந்தப்படும். இந்த தொழில்நுட்பம் தற்போது நாசா கைவசம் உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் 100 கிலோ எடை கொண்ட ரோபோடிக் விண்கலம் 3 நாளில் மார்ஸ் கிரகத்தை சென்றடையும். மனிதர்களை இதில் விண்ணுக்கு அனுப்பும் வகையில் தொழில்நுட்பம் வடிவமைக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: New Laser technology for mars travel, new laser travel to mars, travel to mars, கலிபோர்னியாவில் உள்ள சாந்த பார்பாரா, நாசா, பூமியில் இருந்து மார்ஸ் கிரகத்துக்கு 3 நாளில் சென்றுவிடலாம், லேசர்
-=-