பெட்ரோல் விலை ஏற்றம் : இன்றைய காமெடி

சென்னை

தினசரி பெட்ரோல் விலை மாற்றத்துக்குப் பின் இன்று முதல் முறையாக பெட்ரோல் விலை 1 பைசா ஏறியுள்ளது.

பெட்ரோல் நிறுவனங்கள் தினமும் விலையை மாற்றி அமைக்கலாம் என ஒரு உத்தரவு மிக சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டது,   அதன்படி தினமும் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.  அதன்படி ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு அன்றைய பெட்ரோல் விலை அறிவிக்கப்படும்.   இதுவரை விலை எந்த ஒரு பெரிய மாற்றமும் இன்றியே தொடர்ந்தது.

ஆனால் இன்று ஒரு காமெடி நிகழ்ந்துள்ளது.  இன்று முதன் முதலாக விலையேற்றம் அறிவிக்கப்பட்டது.   ஆனால் எவ்வளவு விலையேற்றம் என்பது தான் காமெடி.   ஆம் லிட்டருக்கு 1 பைசா விலை ஏறியுள்ளது.  இந்த மாற்றம் சென்னை மற்றும் கொல்கத்தாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.  டில்லி, மும்பை நகரங்களில் மாற்றம் ஏதுமில்லை