பெண்ணின் படத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பியவர் கைது

 

மாவட்ட செய்திகள்

புதுச்சேரி: காதலிக்க மறுத்த பெண்ணின் படத்தை வாட்ஸ்அப் முலம் பலருக்கு அனுப்பிய காதலரை  போலீஸார் கைது செய்துள்ளனர்.

1watsup
புதுச்சேரி சின்னகாலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த இளம் பெண், தனியார் மருந்து நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாரர். அவருடன் கீழ்புதுப்பட்டு பகுதி கிழக்கு கடற்கரை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ரகுவும் பணியாற்றி வந்தார்.
ரகு அந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.   இதுபற்றி அந்தப் பெண்ணின் தோழியிடம், தான் அந்த பெண்ணை காதலிப்பது பற்றி தெரிவித்து, தனது காதலுக்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். ரகுவின் காதல் குறித்து அந்தப் பெண்ணிடம் தோழி தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட அந்த இளம் பெண் அதிர்ச்சி அடைந்து தனது தோழியை கண்டித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, தோழியிடம் இருந்து அந்தப் பெண்ணின் புகைப்படத்தை ரகு வாங்கி அதனுடன் தனது படத்தையும் இணைத்து வாட்ஸ்அப் வாயிலாக மற்றவர்களுக்கு அனுப்பியிருக்கிறார்.

இதுபற்றி இளம்பெண் கொடுத்த  காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிந்து, ரகுவை கைது செய்தனர்