பெண் டி.எஸ்.பி தற்கொலை!

Dsp-vishnupriya

திருச்செங்கோடு:

திருச்செங்கோடு பெண் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருச்செங்கோடு பகுதி டி.எஸ்.பியாக பதவி வகித்த விஷ்ணுபிரியா இன்று தனது குவார்ட்டஸ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கடலூரைச் சேர்ந்த இவருக்கு வயது 27

பணியில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பவர் விஷ்ணுபிரியா. இன்று காலையில், பெண் காவலர் ஒருவர், ஆசிரியை ஒருவரை அடித்துவிட ஆசிரியர்கள் போராட்டத்தில் இறங்கினர். உடனடியாக அங்கு சென்று, காவலர் மீது நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லி, ஆசிரியர்களை சமாதானப்படுத்தி அனுப்பினார் விஷ்ணுபிரியா. அந்த அளவுக்கு இன்று காலையில் கூட பணியில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்ட இவர், திடுமென தனது குவார்ட்டர்ஸ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தலித் இளைஞர் கோகுல்ராஜ் வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து தனிப்படைகளில் ஒன்று விஷ்ணு பிரியா தலைமையில் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விஷ்ணுபிரியாவின் தற்கொலைக்குக் காரணம் தெரியவில்லை.

1 thought on “பெண் டி.எஸ்.பி தற்கொலை!

  1. நேற்றைய என் ஆலோசனையில் ஒரு திருத்தம். related posts என்பதை அண்மைச் செய்திகள் என்றாக்கிவிடுங்கள்

Leave a Reply

Your email address will not be published.