பெப்சி கோக் ரசாயன பானங்களுக்கு எதிராக மாணவிகள்

1

ஈரோடு திண்டல் பகுதியில் இயங்கிவரும் வேளாளர் மகளிர் கல்லூரியில்  நியூட்ரிசியன் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள்,  தங்களுடைய கல்லூரிக்குள்  கோகோ கோலா , பெப்சி போன்ற குளிர்பான ரசாயனங்களை  விற்பனை செய்யக்கூடாது என்று கல்லூரி நிர்வாகத்திற்கு கொடுத்துள்ள விண்ணப்பம் அளித்தனர்.

இதில் சிறப்பு என்னவென்றால் ஒரே நாளில்  சுமார் 750 மாணவிகள் இந்த படிவத்தில் கையெழுத்து போட்டுள்ளார்கள்.

நல்லதொரு மாற்றம் இளைய தலைமுறையிடம் இருந்து துவங்கி உள்ளது. இந்த முயற்சியை மனமார  பாராட்டுவோம்.

மற்ற கல்லூரி மாணவர்களும் இதே போல செயல்பட வேண்டும்.

Karthikeya Sivasenapathy (முகநூல் பதிவு) 

You may have missed