பேராசிரியை நிர்மலா விவகாரம்: தமிழக காங்கிரஸ் மகளிர் அணியினர் சாலையில் அமர்ந்து போராட்டம்! குஷ்பு பங்கேற்பு

சென்னை:

ருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவியை கண்டித்து  தமிழக காங்கிரசின் மகளிர் பிரிவு சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் செய்தார்.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த  பேராசிரியை நிர்மலா கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,   நிர்மலா தேவியை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில்  மகிளிர் காங்கிரஸ்  அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு  மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

ஆர்ப்பாட்டத்தின்போது,   ‘‘எதிர்ப்போம், எதிர்ப்போம், பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்ப்போம்’’, ‘‘ரத்து செய் ரத்து செய் பாலியல் கொடுமையில் ஈடுபடுவோரின் குடியுரிமையை ரத்து செய்’’ ‘‘கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய-மாநில அரசுகளை கண்டிக்கிறோம்’’ என்பன போன்ற கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

தொடர்ந்து மகளிர் காங்கிரஸ் அணியை சேர்ந்தவர்கள் மற்றும் குஷ்பு சேப்பாக்கம் சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களை போலீசார் அங்கிருந்து கலைந்துபோக செய்தனர்.

 

கார்ட்டூன் கேலரி