போங்க.. போயி… புள்ள குட்டிய படிக்க வைங்க!

 

a

மிழகத்தை உலுக்கிய சமீபத்திய மழை, வெள்ளத்தால் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.  வெள்ளம் பாதித்த பகுதிகளில் பெரும்பாலான மாணவர்களின் பாட புத்தகங்களும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன.

அவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கும் பணியில் அரசும், தனியார் தொண்டு நிறுவனங்களும் ஈடுபட்டிருக்கின்றன என்றாலும் இன்னும் பல மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் கிடைக்கவில்லை.

ஆகவே, “மாணவர்களுக்கு  அரையாண்டு தேர்வு நடத்தக்கூடாது” என சில கட்சிகளும், அமைப்புகளும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தன.

ஆனால், வரும் ஜனவரி 11ம் தேதி முதல் ப்ளஸ் டூ அரையாண்டு தேர்வு துவங்கும் என்று தமிழக அரசின், பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இத் தேர்வு, ஜனவரி 11 அன்று துவங்கி ஜனவரி 27ம் தேதி வரை நடக்கும்.

தேர்வு அட்டவணை:

ஜனவரி 11 – மொழிப்பாடம் முதல் தாள்
ஜனவரி 12 – மொழிப்பாடம் இரண்டாம் தாள்
ஜனவரி 13 – ஆங்கிலம் முதல் தாள்
ஜனவரி 14 – ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஜனவரி 18 – வணிகவியல், வீட்டு மனையியல், புவியியல்
ஜனவரி 19 – கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி,
ஜனவரி 21 – இயற்பியல், பொருளாதாரம்,
ஜனவரி 22 – வேதியியல், கணக்குப் பதிவியல்,
ஜனவரி 25 – உயிரியல், தாவரவயில், வரலாறு, வணிகக் கணிதம்
ஜனவரி 27 – கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, புள்ளியியல்,

தேர்வுகள் காலை 10 முதல் 1.15 வரை நடைபெறும். இதில் முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிடங்கள் விடைத்தாளில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும்

இணையத்தில் சிக்கிக்கிடக்கும் தாய்மார்களே, தந்தைமார்களே.. பிள்ளையின் படிப்பைக் கவனியுங்க!

Leave a Reply

Your email address will not be published.