போலீஸாருக்கு எதிராக ஆயுதம் ஏந்துங்கள்; மேற்கு வங்க பாஜக தலைவர்கள் சர்ச்சைப் பேச்சு

கொல்கத்தா:

பாஜகவுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வர, போலீஸாரை தாக்குங்கள், ஆயுதம் ஏந்துங்கள் என கட்சியினரை மேற்கு வங்க பாஜக தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

‘ங்களை தாக்கும் போலீஸாரை திருப்பித் தாக்குங்கள்.ஒன்றும் நடந்துவிடாது என்று தொண்டர்களை பாஜக மாவட்டத் தலைவர் கலோசோனா கேட்டுக் கொண்டுள்ளார். போலீஸார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் போல் செயல்படுகின்றனர்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை தாக்காதீர்கள். போலீஸாரை ஆயுதத்தால் தாக்குங்கள். அதன்பிறகுதான் அவர்கள் நாம் பேசுவதைக் கேட்பார்கள் என்றார்.
மாநில பாஜக மகளிர் அணித் தலைவி லோக்கெட் சாட்டர்ஜி தொண்டர்களிடம் கூறும்போது,” போலீஸார் உங்களை தாக்கவோ, கொல்லவோ முயன்றால், நீங்கள் அதையே திருப்பிச் செய்யுங்கள். பாஜகவுக்கு எதிரான வன்முறையை அடக்க தேவைப்பட்டால் ஆயுதத்தை கையில் எடுக்க தயாராக இருக்கவேண்டும்.
மேற்குவங்கத்தில் நடக்கும் கலவரமோ, சண்டையோ வெளியே தெரிவதில்லை. பாஜகவினர் தொடர்ந்து தாக்கப்படுவதை போலீஸாரும் கண்டுகொள்வதில்லை. நம்மை காப்பாற்றிக் கொள்ளவே ஆயுதம் ஏந்தவேண்டியுள்ளது” என்றார்.