மக்களவை தேர்தல் 2019 : பாஜகவுக்கு மட்டுமே வாக்குப் பதிவு செய்த மின்னணு இயந்திரம்

தேஜ்பூர்

சாம் மாநிலம் தேஜ்பூரி தொகுதியில் ஒரு மின்னணு இயந்திரத்தில் அனைத்து வாக்குகளுக்கும் பாஜகவுக்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடந்த மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.    இதில் அசாம் மாநிலத்தில் உள்ள தேஜ்பூர், காளியாப்போர், திப்ருகர், லகிம்புர் ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு வாக்காளிப்பு நடந்தது.    இந்த வாக்குப்பதிவில் தேஜ்பூர் மாநிலத்தில் உள்ள ரங்காஜன் இல் உள்ள கோதம்கட் மிரி காவ் பள்ளியிலும் வாக்குப்பதிவு நடந்தது.

அசாமில் உள்ள முக்கிய தொகுதிகளில் தேஜ்பூரும் ஒன்றாகும்.  இங்கு 76.03 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.  தில் 38.65 லட்சம் ஆண்களும் 37.38 லட்சம் பெண்களுகும் உள்ளனர்.   154 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர்.    மொத்தம் 9574 வாக்குச் சாவடிகள் உள்ளன.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் ஒரு இயந்திரத்தில் மக்கள் எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்கு சென்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.   இந்த விவரம் குறித்த் புகார் அளிக்கப்பட்டது.   வாக்குச் சாவடி அதிகாரிகள் அந்த இயந்திரத்துக்கு பதில் வேறொரு இயந்திரம் மாற்றி உள்ளன்ர்.