மண் சரிந்து 3 தொழிலாளர்கள் சாவு

 

மாவட்ட செய்திகள்
மதுரை: மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள கல் குவாரியில் வேலை செய்து கொண்டிருந்தபோது மண் சரிந்ததில் 3 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.

land slide
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்  பகுதியில் உள்ள கொண்டடையம்பட்டி  கல்குவாரியில்  வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர்.

கற்களை உடைப்பதற்காக வெடிவைப்பது வழக்கம். இன்று காலை வெடிமருந்து வைப்பதற்காக தொழிலாளர்கள் குழி தோண்டிகொண்டிருந்தனர்.
அப்போது திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.  . இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.