mdmk-pjk-tamilisai

மதிமுக தலைமையக்ததை முற்றுகையிடுவாதாக சொல்லவில்லை”- தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்

இப்தார் விருந்தில் கலந்துகொண்ட மதிமுக தலைவர் வைகோ, “இந்துத்துவா சக்திகளை தமிழகத்தில் வளரவிட மாட்டோம்” என்று பேசினார்.

இதற்கு பதலடியாக, “வைகோவின் மதிமுக தலைமையமான தாயகத்தை முற்றுகை இடுவோம்” என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சொன்னதாக சமூக இணையதளங்களில் செய்தி பரவியது. மதிமுக ஆதரவாளர்களும், இந்துத்துவா எதிர்ப்பாளர்களும் தமிழிசை சவுந்திரராஜனை கண்டிக்கும் விதமாக பதிவுகளை எழுதி சூட்டை கிளப்பினார்கள்.

இந்த நிலையில் நாம், தமிழிசை சவுந்திரராஜனை தொடர்புகொண்டு இது குறித்து கேட்டோம். அதற்கு அவர், “நான் அப்படிச் சொல்லவில்லை. அவரது கட்சி அலுவலகத்தை நான் ஏன் முற்றுகையிட வேண்டும்? ” என்றவர், தான் பேசியதை நம்மிடம் கூறினார்”

“இந்துத்துவா சக்தியை எதிர்ப்போம் என்று சொல்லும் வைகோ, வாஜ்பாய் காலத்தில் ஏன் கூட்டணி வைத்தார்….அதன் பிறகும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்கூட மோடி அவர்களின் தலைமையை ஏற்று எங்களுடன் கூட்டணி வைத்தாரே… அப்போதெல்லாம் தெரியவில்லையா.. அவர் கேட்டது கிடைக்கவில்லை என்பதால் ஏதேதோ பேசுகிறார்.. அவரை தமிழகத்தில் கால் ஊன்ற முடியாத நிலையில் இருக்கிறார்.. இவர் எங்களைச் சொல்வதைப் பற்றி கவலைப்படவில்லை. நிச்சயமாக தமிழகத்தில் நாங்கல் கால் ஊன்றுவோம்..” என்றுதான் பேசினேன்” என்று தமிழிசை சவுந்திரராஜன் நம்மிடம் தெரிவித்தார்.