roundboy

மதுக்கடைங்கள மூடுங்கன்னு பல தரப்பிலிருந்தும் போராட்டம் வெடிக்குது. டாஸ்மாக் கைடயில வேலை பாக்கறவங்க என்ன நெனக்கிறாங்கனு தெரிஞ்சுக்கலாமேனு யோசிச்சேன். டாஸ்மாக் ஊழியர் சங்கத்தோட நில துணைத்தலைவர் மோகனை பிடிச்சேன்.

ஆதங்கத்தைக் கொட்டிட்டார்: “நாங்க டாஸ்மாகல வேலை பாக்கறதால, மதுக்கடைகளுக்கு ஆதரவா இருப்போம்னு பல பேரு நினைக்கிறாங்க.. நாங்களும் மனுசங்கதானே தம்பி.. ! மக்களை அழிக்கிற கேடுகெட்ட சாராயத்த விக்கணும்னு எங்களுக்கு தலையெழுத்தா? படிச்சும் வேலை கிடைக்காத கொடுமையால டாஸ்மாக்ல வந்து நிக்கறோம்.

படிப்படியா மதுவிலக்கு கொண்டு வரணும் ஒருகட்டத்துல மது இல்லாத தமிழ்நாடுன்னு ஆகணும். அதுதானே நம்ம சமுதாயத்துக்கு நல்லது?” அப்படின்வர், “ போனவருச காந்தி ஜெயந்தி அன்னிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை பக்கத்துல உண்ணாவிரதம் இருந்தோம். அப்போ தமிழக அரசுக்கு நாங்க வச்ச முக்கியமான கோரிக்கை என்ன தெரியுமா.. “முழு மதுவிலக்கை அமல்படுத்து” அப்படிங்கிறதுதான்.

அப்போ நாங்க வச்ச ஆறு அம்ச கோரிக்களைச் சொல்றேன் கேளு..

மது விலக்கை படிப்படியாக அமுல் படுத்து!

மது விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை என குறை!

மதுக் கடை பார்களுக்கான உரிமங்களை உடனடியாக ரத்து செய்!

வாரம் தோறும் ஞாயிற்றுகிழமை, மாதம் முதல் தேதி விடுமுறை தினமாக அறிவித்திடு!

அரசு வேலைக்கான காலி பணியிடங்களில் டாஸ்மாக் பணியாளர்களை பணி நியமனம் செய்! ..

இதுதான் எங்களோட கோரிக்கைங்க..” அப்படின்னு சொல்லி முடிச்சார் மோகன். அந்த போராட்டத்துக்காக போட்ட போஸ்டரையும் கொடுத்தாரு.

roundboy1

மக்களை சீரழிக்கிற மதுக்கடைகளை ஒழிக்கணும்னு அங்க வேலை செய்யற ஊழியர்களே சொல்றது நல்ல விசயம்தானே.. அரசு கவனத்துல எடுத்துக்கட்டும்!