சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டினம்பாக்கத்தில் வழிப்பறி கொள்ளையனை விரட்டி சென்ற ஆசிரியை மற்றும் முதியவர் ஒருவர் பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
women-self-immolation-attempt
சென்னை பட்டினப்பாக்கத்தில் வழிப்பறி சம்பவத்தின் போது ஆசிரியை நந்தினி, முதியவர் சாகர்  ஆகியோர்  பலியாயினர்.  இதற்கு காரணமான வழிப்பறி கொள்ளையன் கருணாகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்களுக்கு மதுக்கடைகளே காரணம் என்று அப்பகுதி பொதுமக்கள் புகார் கூறினர்.. மதுக்கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பயனாக மதுக்கடை மூடப்பட்டது.
மூடப்பட்ட மதுக்கடை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டினப்பாக்கம் மதுக்கடை முன்பு பெண்கள் அமைப்பினர் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ம.க. மகளிர் அணியை சேர்ந்த ஆக்னஸ் என்பவர் திடீரென தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். தனது வாக்காளர் அடையாள அட்டை, ரே‌ஷன் கார்டு ஆகியவற்றையும் தீ வைத்து எரிக்க போவதாகவும் அவர் கூறினார்.
அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் மண்எண்ணை கேனை பிடுங்கி, தீக்குளிக்க முயன்ற ஆக்னசின் உடலில் தண்ணீரை ஊற்றினர். மேலும் சில பெண்களும் தீ குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 30 பெண்களை கைது செய்தனர்.