மதுரை: மற்றும் 8 தமிழக  ரயில் நிலையங்கள், இந்திய ரயில்வேயின் சுத்தமான ரயில் நிலையங்கள்!

mdu rail

மதுரை ரயில்வே நிலையம், இந்திய அளவில் A1 பட்டியல் நிலையங்களில், முதல் 10 சுத்தமான நிலையங்களின் பட்டியலில்  இடம் பெற்றுள்ளது.

கோவில்பட்டி, விருதுநகர், ஈரோடு, சேலம், மேட்டுப்பாளையம், கும்பகோணம், திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் ஆகிய 8 நிலையங்கள், இந்திய அளவில் முதல் 20 சுத்தமான நிலையங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இந்திய அளவில் ரயில் நிலையங்களின் உண்மையான நிலையை அறியவும், ரயில் நிலையங்களின் சுத்தத்தை மேம்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்  என்பதை அறியவும் இந்த கணக்கெடுப்பு உதவும் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த A1 மற்றும் A நிலையங்களில் சுத்தத்தின் அடிப்படையிலான தர வரிசைப் பட்டியல், அவ்வப்போது செய்யப்படும் தணிக்கை மற்றும் பயணிகளின் கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

இந்தக் கணக்கெடுப்பு எடுக்கும் பணி IRCTCக்கு வழங்கப்பட்டிருந்தது. IRCTC, M/s TNS India Pvt. Ltd என்ற நிறுவனத்தின் மூலம் இந்தக் கணக்கெடுப்பை நடத்தியது.

75 A1 வகை நிலையங்களும், 332 A வகை நிலையங்களும் இந்தக் கணக்கெடுப்பில் கலந்து கொண்டதாக, இந்த அறிக்கை தெரிவிக்கிறது.