மதுவிலக்கு அரசியல் பிரச்சனை அல்ல : ஜி.கே.வாசன்

gk-vasan

த.மா.கா அலுவலகத்தில் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ‘’நாளை மறுநாள் தஞ்சையில் இருந்து பிரச்சாரத்தை துவங்குகிறேன். 130 முதல் 150 தொகுதி வரை பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிள்ளேன்.

ஓரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும், 22ஆம் தேதிக்குள் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.
எங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் கேப்டன் விஜயகாந்த் சிறப்பாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
மதுவிலக்கு அரசியல் பிரச்சனை அல்ல அது மக்களின் பிரச்சனை மதுவிலக்குக்காக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.