மதுவை ஒழிக்க….

madhuvai-ozhikka

மதுவை ஒழிக்க……

ஊரெங்கும் போராட்டங்கள்..!

வன்முறை சம்பவங்கள்….

காவல்துறை நடவடிக்கை…

கட்சிகளின் போராட்டம்…

தலைவர்கள் கைதுப்படலம்…!

என்ன நடக்கிறது…?

பொதுமக்களுக்கு

ஒன்றும் புரியவில்லை…!!

இத்தனை நாட்களாய்

எங்கே போயின இந்த அக்கறை..?

சுயநலமா…? பொதுநலமா..?

இந்த போராட்டங்களால்

மதுவை ஒழிக்க முடியுமா..?

நிச்சயம் முடியாது..!

பெண்கள் நினைத்தால்

மட்டுமே முடியும்…!

இது ஏதோ பொதுப்பிரச்சனை

என்று ஒதுக்கமுடியாது..!

உங்கள் கணவன்

குடிகாரனாக வருவதை…நீங்கள்

விரும்புகிறீர்களா..?

உடலை கெடுத்து…நோயாளி

கணவனை …மருத்துவமனைக்கு

அழைத்துச் செல்வதில்

உங்கள் வாழ்க்கை தொலைய வேண்டுமா..?

சற்று சிந்தியுங்கள்….!!

பெண்களே.!

உங்கள் கல்லூரிகளில்..

அலுவலகங்களில்…

உங்கள் தெருக்களில்….

உங்கள் வீடுகளில்…

உறக்கச்சொல்லுங்கள்….

உறுதிமொழி எடுங்கள்….

குடிப்பழக்கம் உள்ளவனை

திருமணம் செய்யமாட்டேன்

என்று…!!

மதுக்கடைகள் மூடப்படும்….

மது அருந்த யாரும்

செல்லாததால்….!!

செய்வீர்களா…?!

– முத்துகுமார்.

Leave a Reply

Your email address will not be published.