மது விலக்கு, லோக் ஆயுக்தா.. : தி.மு.க. தேர்தல் அறிக்கை

o

 

ன்று தி.மு.க தேர்தல் அறிக்கையை அக் கட்சி தலைவர் கருணாநிதி வெளியிட்டார். அதில் உள்ள சில முக்கிய அம்சங்கள்…

மதுவிலக்கு அமல்படுத்த தனிச்சட்டம்.

விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கை.

லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும்.

விவசாயக் கடன் தள்ளுபடி.

முதியோர் உதவித் தொகை ரூ 1,300.

இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ரூ 1 லட்சம் கடன்.

ரூ 10,000 கோடி செலவில் ஏரிகள் தூர வாரப்படும்.

மாவட்டங்கள் தோறும் வேலைவாய்ப்பு முகாம்.

ஆவின் பால் விலை ரூ 7.00 குறைக்கப்படும்.

மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி.

4வது காவல் ஆணையம்.

குடிசை வீடுகளை கான்க்ரீட் வீடுகளாக கட்ட ரூ 3.00 லட்சம் மானியம்.

பட்டதாரிப் பெண்களுக்கு திருமண உதவித்தொகை ரூ 60,000.

சத்துணவு திட்டத்தில் பால்.

மாணவர்களுக்கு இணைய வசதி.

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை.

நெல்லுக்கு ஆதார விலை ரூ 2,500. கரும்புக்கு ரூ 3,500.