மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து திருவாரூரில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்:

ல்கலைக்கழக மானியக்குழுவை கலைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதை எதிர்த்து, திருவாருரில் கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பல்கலைக்கழக மானியக்குழுவை கலைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூரில் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்பு புறக்கணித்து விட்டு, கல்லூரி வாசலில் மத்தியஅரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

பல்கலைக்கழக மானியக்குழுவை கலைக்கும் முடிவை மத்திய அரசு கைவிடவேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.  அதுபோல,  மன்னார்குடி, திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.