மத்திய பிரதேசம், கோவா மாநில காங்கிரஸ் தலைவர்கள் மாற்றம்

டில்லி:

மத்தியப்பிரதேச மாநிலத்த்துக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக கமல்நாத் நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைமை இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேர்தல் பிரசார குழு தலைவராக ஜோதிரத்யா சிந்தியா நியமிக்கப்பட்டுள்ளார். பாலா பச்சன், ராம்நிவாஸ் ராவத், இந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ஜித்து பட்வாரி, சுரேந்திர சவுத்ரி ஆகியோர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் கோவா மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த ஷந்தாராம் நாயக் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கிரிஷ் சோதன்கர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.