மத்திய பிரதேச தேர்தல்: மகா காளேஷ்வரர் கோவிலில் ராகுல்காந்தி சாமி தரிசனம் (படங்கள்)

உஜ்ஜயினி மகாகாளேஷ்வரர்

உஜ்ஜைனி:

த்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, உஜ்ஜைனியில் உள்ள பிரசித்தி பெற்ற  அருள்மிகு மகாகாளேஷ்வரர் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

உஜ்ஜயினி காளேஷ்வரருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்ட இந்திராகாந்தி

இந்த பிரசித்தி பெற்ற மகாகாளேஷ்வரர் கோவிலில் ஏற்கனவே முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி  ஆகியோர்  சிவனுக்கு பால் அபிசேஷம் செய்து வழிப்பட்டுள்ள நிலையில், தற்போது ராகுல்காந்தியும் அதே வழியை பின்பற்றி சாமி தரிசனம் செய்துள்ளார்.

உலக பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களுக்கு ஒன்று உஜ்ஜைனியில் உள்ள சிவத்தலம். ஜோதிர்லிங்கங்களால் ஒன்றான, புராதான நகரமான இங்குள்ள சிவன் வேண்டுவதை தருவான் என்பது பக்தர்களின் ஐதீகம். இதன் காரணமாகவே நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் இந்த ஆலயத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

உஜ்ஜயினி காளேஷ்வரருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்ட சோனியா காந்தி

இந்த கோவிலில் ஏற்கனவே முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவரும்,  முன்னாள் பிரதமருமான இந்திராகாந்தி  வழிபாடு நடத்தி மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வந்த நிலையில், பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்ற சோனியா காந்தியுடம் இந்த ஸ்தலத்திற்கு வந்து, காளேஷ்வரருக்கு பாலோபிஷேசம் செய்து வழிப்பட்டார்.

இந்த நிலையில், தற்போது மத்திய பிரதேச மாநில தேர்தல் அறிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஆட்சியை பிடிக்க தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தியும் சிவனுக்கு பாலாபிஷேசம் செய்து தனது பிரசாரத்தை தொடர்ந்து வருகிறார்.

உஜ்ஜயினி காளேஷ்வரருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்ட ராகுல் காந்தி

கோவிலுக்கு வந்த ராகுலை கோவில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள் உள்பட காங்கிரஸ் கட்சியினர் வரவேற்றனர்.