மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலருக்கு வாழ்த்துகள்- கமல்ஹாசன்

சென்னை:
னசாட்சியோடு சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என்று சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக மநீம தலைவர் கமல் ட்வீட் செய்துள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் நீதியை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கும் மேஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கும், அவருக்கு உறுதுணையாக நிற்கும் மதுரை உயர்நீதி மன்றத்திற்கும், மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.