4

திருச்சி:

தமிழகத்திலிருந்து வெளிநாட்டு வேலைக்காக செல்பவர்களில் பல காரணங்களினால் சிலர் இறக்கிறார்கள். அப்படி கடந்த 2014 -15 நிதி ஆண்டில் திருச்சி விமான நிலையத்துக்கு மட்டும் 275 சடலங்கள் வந்திருக்கின்றன என்ற அதிரச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

அதிகம் சம்பாதிக்கலாம் என்பதாலோ, தகுந்த வேலை வாய்ப்பு கிடைக்காததாலோ தமிழகத்திலிருந்து பலரும் வெளிநாட்டு வேலையை விரும்புகிறார்கள். அப்படிச் செல்பவர்களில் சிலர் பல்வேறு காரணங்களினால் அங்கே மரணமடைகிறார்கள்.

அப்படி மரணமடைபவர்களின் சடலங்கள் சென்னை, திருச்சி, கோவை, மதுரை விமானநிலையங்களுக்கு விமானத்தில் அனுப்பப்படுகின்றன. இதில் திருச்சியில்தான் அதிக அளவில் வருடந்தோறும் சடலங்கள் வந்து இறங்குகின்றன. .

இதுபற்றி விமான நிலைய கார்கோ பிரிவு அதிகாரிகளிடம் பேசினோம். அவர்கள், “வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு கொண்டு வரப்படும் சடலங்களின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2014-15-ம் நிதியாண் டில் 272 சடலங்கள் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தன. நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களில் 110 சடலங்கள் வந்துள்ளன. பொதுவாகவே தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம்” என்றனர்.

“வெளிநாட்டில் எந்த காரணத்தால் அதிகமான இறப்பு ஏற்படுகிறது” என்று .விமான நிலைய மருத்துவ துறையினரிடம் கேட்டோம். அவர்கள், “சடலங்களுடன் இறப்புச் சான்றிதழ், இறப்புக்கான மருத்துவச் சான்றிதழ்கள் இணைக்கப்பட்டிருக்கும் பெரும்பாலானவர்களின் மரணத் துக்கு உடல்நலக்குறைவே காரணமாக  குறிப்பிடப்பட்டிருக்கும். சிலரது மரணத்துக்கு விபத்து என்று காரணம் குறிப்பிடப்பட்டிருக்கும். கொலை செய்யப்பட்டு கொண்டு வரப்படும் சடலங்கள் மிகக் குறைவு.

இப்படி வரும் சடலங்களில் 35 முதல் 50 வயதுக்கு உட்பட்ட ஆண் களே அதிகம்” என்றனர்.

வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்று, கொத்தடிமைகளாக்கப்படும் தொழிலாளர்களை மீட்க தொடர்ந்து முயற்சி எடுத்துவருபவர், இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனத்தின் (INRLF) தலைவர்  வாழப்பாடி கர்ணன்.        nnn

                                                                                                                                                                                     கர்ணன் ராமமூர்த்தி

அவர் நம்மிடம்,“வீடு, நிலங்களை விற்றும், வட்டிக்கு கடன் வாங்கியும் லட்சக் கணக்கில் பணம் செலுத்தி இங்கிருந்து பலர் , மலேசியா, சவுதி, குவைத், மஸ்கட் உள்ளிட்ட நாடு களுக்கு வேலைக்குச் செல்கிறார்கள்.. இவர்களில் சிலருக்கு மட்டுமே ஏஜென்ட்டுகள் கூறியபடி நல்ல வேலை கிடைக்கிறது. பலர், குறைந்த ஊதியம் பெற்று, கொத்தடிமைகளாக பணியாற்றுகிறார்கள். அவர்களது பாஸ்போர்ட், வேலைக்கான அனுமதி சீட்டு போன்றவற்றை நிர்வாகத்தினர் பிடுங்கிக்கொள்வதால் வேறு வழியின்றி தொடர்ந்து கொத்தடிமைகளாகவே இருக்கிறார்கள்.

தற்போது கூட சௌதி அரேபியாவில், 23 தமிழர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள், முஹம்மது அல்மொஜில் க்ரூப் ஆப்   கம்பெனி என்ற கட்டுமான நிறுவனத்தால் வேலையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல எட்டுமாத சம்பளமும் தரமாமல், அவர்கள் அடையாள அட்டையைக்கூட புதுப்பித்துத்தராமல் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். அடையாள அட்டை இல்லாததால் வெளியில் எங்கும் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். அவர்களது துயரம் தெரிந்தும் அங்குள்ள இந்திய தூதரகம் உதவவில்லை என்பது கொடுமை. இங்கு மத்திய மாநில அரசுகளுக்குத் தெரியப்படுத்தியும் பலனில்லை.

வேலையும் இன்றி, தாய் நாட்டுக்கும் திரும்ப முடியாமல் அவர்கள் தவிக்கிறார்கள். இது போல எண்ணற்ற தமிழர்கள், இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் தவித்து வருகிறார்கள் என்பதே உண்மை” என்றார்.

மேலும், அவர், “ஆண்டுதோறும் 1 லட்சம் வெளிநாடு வாழ் இந்தியர்களில் சராசரியாக 53 பேர் மரணமடைகிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அப்படி  இறக்கும் ஒவ்வொரு லட்சம் வெளிநாடு வாழ் இந்தியர்களில் 65 முதல் 78 பேர் சவுதி, அமீரகம், ஓமன் மற்றும் குவைத் நாடுகளில் பணிபுரிபவர்கள் என்கிறது இந்த ஆய்வு.  இந்த நாடுகளில் எழுபது லட்சம் இந்தியர்கள் பணி புரிகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2022ம் ஆண்டு கத்தாரில் நடக்க உள்ள ஃபீபா கால்பந்து போட்டிக்கான அரங்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நிலைமை மிக மோசமாக உள்ளது. 2010ம் ஆண்டில் இருந்து இதுவரை கத்தாரில் மட்டும் 1, 387 இந்தியர்கள் இறந்துள்ளனர். பீஃபா போட்டிக்கான அரங்கு அமைக்கும் பணியில் மேலும் பலர் பலியாகக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

குவைத், சவுதி, கத்தாரில் பணிபுரிபவர்கள், நோய் அல்லது விபத்தில் பாதிக்கப்படும் போது  உரிய மருத்துவ சிகிச்சை அளித்தால் பலரின் உயிரை காப்பாற்றலாம்.   ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை.” என்றார் வருத்தத்துடன்.