மரியானா ட்ரென்ச் (அகழி) பற்றிய புது கண்டுபிடிப்பு

marianaTrench

மரியானா ட்ரென்ச், உலகிலேயே மிக ஆழமான அகழி, கடலுக்கு கீழ் 36000 அடியில் உள்ளது. கற்பனைக்காக ஒரு ஒப்பீடு, உலகிலேயே மிக பெரிய மலையான எவரெஸ்டைக் காட்டிலும் 7000 அடி அதிகம்.

இந்த அகழியில், விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தி பல புதிய செய்திகளை கண்டறிந்துள்ளனர். மரியானா ட்ரென்ச்சில் டைடானியமால் மூடிய ஒரு ஒலிவாங்கியை (Microphone)ஐ செலுத்தி, கடலுக்கு கீழே கேட்கும் ஒலிகளைப் பதிவுசெய்துள்ளனர். 23 நாட்கள் பதிவு செய்தபிறகு, அந்த ஒலி வாங்கியை 4 மாதங்கள் கழித்து திரும்பப்பெற்று அதில் என்ன பதிவாகியுள்ளது என்று கேட்டுள்ளனர்.

ஆய்வு நடத்திய ராபர்ட் ஜியாக், ” நிசப்தத்தை தவிர வேறொன்றும் கேட்காது என்று எண்ணிய எங்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. 4 சூறாவளி, 1 பூகம்பம், கப்பல் செல்வது, திமிங்கலம் செல்வது போன்ற அனைத்தும் அத்தகைய அகழியில் கேட்க பதிவாகியிருப்பதாக” கூறியுள்ளார்.

மேலும் ஆய்வுகள் சில நடத்தி, கிடைக்கும் தகவல்களை மேற்கொண்டு எப்படி பயன்படுத்துவது என்று தீர்மானிக்கப்போவதாகக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.