newsbond
தேசிய கட்சியில் பல பொறுப்புகள், ஆட்சி அதிகாரம் என்று அனுபவித்தவர். திடீரென பிரிந்து பழைய கட்சியை தூசிதட்டி மீண்டும் துவங்கினார் அந்த வாசமான தலைவர்..
ஆளும் தரப்புடன் கூட்டணி வைக்க திட்மிட்டிருநதார். மறைமுக பேச்சு வார்த்தைகளும் நடந்தது. ஆனால் அங்கி இப்போது இடமில்லை என்று சொல்லிவிட்டார்கள்.
இன்னொரு கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்றால், அவர் எந்த கட்சியில் இருந்து பிரிந்துவந்தாரோ, அந்த கட்சி அங்கே கூட்டணியில் இருக்கிறது.
இரு கூட்டணிகள் சேர்ந்து போட்டியிடும் அணியில் சேரலாம் என்றால், அங்கே இடமில்லை என்று சொல்லிவிட்டார்கள்.
வேறு வழி இல்லாமல், மலர் கட்சியுடன் கூட்டணி வைக்க  முடிவெடுத்து காய் நகர்த்தி வருகிறார் அந்த வாசமான தலைவர்.
“ஆச்சரியமாக இருக்கிறதே.. மதவாத கட்சியுடனா சேர்கிறார்” என்று கேட்டால், அவரது கட்சியில் இருப்பவர்களே சிரிக்கிறார்கள்:
“கப்பலுக்கு பொறுப்பா இவர் இருந்தபோது, கப்பல் கரை சேரும் இடங்களில்  இரண்டை, மலர் கட்சி தொழிலதிபருக்கு அளித்தவர்தான் இவர். இதனால்தான் இவர் இருந்த முந்தைய கட்சியின் துணைத்தலைவர் இவரை கடுமையாக பேசினார். அதையடுத்துதான் தனிக்கட்சி துவங்கினார்.  ஆகவே  மலர் தரப்புடன் சேர்வது அவருக்கு பிரச்சினையே இல்லை” என்கிறார்கள்.
ம்.. மலருக்கு வாசம் சேர்க்கப்போகிறாரோ…!