மழை உண்டு! புயல் இல்லை! : வானிலை ஆய்வு மையம்

maxresdefault

சென்னை:

னி வரும் நாட்களில் தமிழகத்தை புயல் தாக்காது. ஆனால் மழை தொடர்ந்து பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியிள்ளதாவது:

“வடகிழக்கு பருவமழை காலமான தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இந்த மாத ஆரம்பத்தில் இருந்து வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.

கடந்த இரு தினங்களாக மழை அளவு குறைந்திருக்கிறது. இந்த லையில், தெற்கு ஆந்திரா வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் கடந்த 16-ந்தேதி (திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று முன்தினம்(செவ்வாய்க்கிழமை) உருவானது.

இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ததது. தற்போது அந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி வலுகுறைந்து, அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடிக்கிறது. இதனால், தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவும் வாய்ப்பு உண்டு. .

குறிப்பாக விருதுநகர், கோவை, நீலகிரி உள்பட உள்மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். . சென்னையை பொறுத்தவரையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்யலாம்.  மற்றபடி புயல் போன்ற நிகழ்வுகள் எதுவும் வரும் நாட்களில் இருக்காது” – இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.